School Calendar - October 2018
Sunday, September 30, 2018
அக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி
எங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை அரசுப் பள்ளி- எங்கள் முகவரி' என்ற அமைப்புக்கு ஒதுக்குவோம்!’ - 4 ஆசிரியைகளின் பலே முயற்சி
Friday, September 28, 2018
அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. அதை உரிய வகையில் ஊக்கப்படுத்தினாலே அவர்களை உலகத்துக்கு அடையாளம் காட்ட முடியும்.
இதை, ஏழைக் குழந்தைகளின் பெற்றோரால் செய்ய இயலாது. எனவே, நாங்கள் செய்கிறோம் எனக் கரம்கோத்திருக்கிறார்கள், அரசுப் பள்ளியைச் சேர்ந்த நான்கு ஆசிரியைகள். மாற்றமும் ஏற்றமும் தன்னால் உருவாகாது. நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீதா, பத்மஶ்ரீ, சசிகலா மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனா பூபதி ஆகிய நான்கு ஆசிரியைகள் இணைந்து, 'அரசுப் பள்ளி; எங்கள் முகவரி' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.
45 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் ஏற்பாடு
Friday, September 28, 2018
பள்ளிகளில் காலியாக உள்ள, 45 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், விரைவில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க, ஆயிரத்து 474 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, இப்பணியிடங்களில், பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) ஒப்புதல் அடிப்படையில்,மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியத்தில், ஆசிரியர்களை பணியில் அமர்த்த, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.கோவையில், 45 முதுகலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' பி.டி.ஏ., மூலம் நிரப்பப்படும் காலியிடங்களுக்கு ஊதியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'எனவே விரைவில் தகுதியுள்ளவர்களை நிரப்ப, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்
ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்
Friday, September 28, 2018
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 789 பதவிகளை நிரப்ப உள்ளது. இதற்காக கடந்த ஜூன் 3ம் தேதி நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வை சுமார் 3 லட்சம் பேர் எழுதினர்.இதில் இந்தியா முழுவதும் சுமார் 9000 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 432 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. தொடர்ந்து 29ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது.
30ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4), அக்டோபர் 6ம் தேதி இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடக்கிறது.கடைசி நாளான 7ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது. அதாவது, சூளைமேடு ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு நடக்கிறது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக நேர்முக ேதர்வு நடைபெறும்
உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழை மக்களுக்கு பயன்படுத்து என்பார்கள் நிருபித்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் !! திரு K.S.கந்தசாமி
Friday, September 28, 2018
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தி, தனது தாய் அனிதா , தந்தை வெங்கடேசன் ஆகியோரை இழந்து மிகவும் ஏழ்மையான நிலையில் தனது தங்கை மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் ஆனந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் கணிகிலுப்பை அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கே.எஸ்.கந்தசாமி அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பியுடன் சேர்ந்து அவரது வீட்டில் மதிய உணவு உண்டு சிறப்பி்த்து, புதிய மிதிவண்டி மற்றும் பழங்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆனந்திக்கு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பிரசாதம் வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது வசித்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.
10th Unit Tests
Thursday, September 27, 2018
PREPARED BY
U.KARTHIKKUMAR.,
M.A.,M.SC.,M.Ed.,MATHS .,
Head of department IN MATHS.
UNIVERSAL MAT HR SEC SCHOOL.,
TIRUPUR-641664
10th - Maths - Unit Test 1 - Sets & Functions - E/M
10th - Maths - Unit Test 2 - Sets & Functions - E/M
10th - Maths - Unit Test 3 - Sequence and Series - E/M
10th - Maths - Unit Test 4 - Sets & Functions - E/M
10th - Maths - Unit Test 5 - Sets & Functions - E/M
RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.
Thursday, September 27, 2018
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின்முழுமுகவரி
அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி
5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்
6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/- செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற வில்லை எனில்(court fees stamp) மனுவின் மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)
7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள்விண்ணப்பத்தை ஒளிநகல் (xerox) எடுத்து வைக்கவும்
8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில்அனுப்ப வேண்டும்.(மேல் முறையீட்டின் போது ஒப்புதல் அட்டைமுக்கியம்.
தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?
1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனைசெய்யும் உரிமை, (The right to review relevant documents and records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox) ஆகியன
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல்திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள்முதல் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டு அதிகாரியின்பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடுசெய்யலாம்.
Subscribe to:
Posts (Atom)