டெல்லி: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று மிக முக்கியமான எஸ்சி/எஸ்டி பதவி உயர்வு வழக்கு ஒன்றில் அவர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
SC/ST reservations in promotion: SC favors the 2006 judgment, Said No to reservation
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது இடஒதுக்கீடு வழங்க கூடாது என்று கடந்த 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதற்கு எதிராக மத்திய அரசும், பல சிறுபான்மையினர் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை நீண்ட நாட்களாக நடந்தது. பல்வேறு காரணிகள் இதில் கருத்தில் கொள்ளப்பட்டது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்து. மேலும் அரசு பணியில் இவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் விசாரணை முடிந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஏழு நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
2006ல் வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதான். அரசு வேலைவாய்ப்பில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று தீர்ப்பளிக்கப்ட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment