சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் வரையிலான மத்திய அரசின் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்கட்டமைப்பு வசதி இல்லாத நிலையில் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் திட்டத்தின் மூலம் மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.
அந்த வகையில் அரசு உதவி பெறும், உதவி பெறாத தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகிய சிறுபான்மையினர் நல அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம், அறிவியல் கூடம், சுகாதார வளாகம், குடிநீர், மகளிர் விடுதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment