நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலமான ''இன்சைட்'' நாளை செவ்வாயில் தரையிறங்க உள்ளது.
நியூயார்க்: நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலமான ''இன்சைட்'' நாளை செவ்வாயில் தரையிறங்க உள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் நாசா மிக தீவிரமாக களமிறங்கி உள்ளது. ஏற்கனவே நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக க்யூரியாசிட்டி ரோவரை அனுப்பி உள்ளது.
இந்த ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது நாசாவின் இன்சைட் செவ்வாயில் களமிறங்க உள்ளது.
எப்போது அனுப்பியது
ஒரே இடத்தில் இருக்கும்
என்ன வடிவமைப்பு
இதை உருவாக்க 5000 கோடி ரூபாய் ஆனதாக கூறப்படுகிறது. இதன் எடை 360 கிலோ இருக்கும். நாசா மட்டுமில்லாமல் ஐரோப்பா விஞ்ஞானிகளும் பணியாற்றி இருக்கிறார்கள். இதன் அகலம் 1.5 மீட்டர் கொண்டது, நீளம் 6 மீட்டர் கொண்டது.
என்ன செய்யும்
இதில் 1.8 மீட்டர் நீளத்திற்கு ரோபோட் கை ஒன்று உள்ளது. இதன் மூலம் செவ்வாயின் உட்பகுதியை ஆராய்ச்சி செய்ய முடியும். செவ்வாயின் உட்பகுதியை ஆராய்ச்சி செய்யும் நோக்கில்தான் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இதில் உள்ள செய்ஸ் எனப்படும் மீட்டர் மூலம் இதன் உள்பகுதியை ஆராய்ச்சி செய்ய முடியும்.
அட சூப்பர்
இதில் இருக்கும் மீட்டர்கள் மூலம் செவ்வாயில் ஏற்படும் நிலநடுங்கங்களை கூட கண்டுபிடிக்க முடியும். இதில் இருக்கும் ரோபோட் கைகள் செவ்வாயை துளைத்து, 5 மீட்டர் ஆழம் வரைய சோதனை கருவிகளை அனுப்பி, சோதனை செய்ய உள்ளது. செவ்வாயில் குழி தோண்ட போகும் முதல் மனித உபகரணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு
இதில் என்ன சிறப்பு என்றால் இந்த இன்சைட் தானாக சிந்திக்கும் ரோபோட் ஆகும். இதை ஹுமனாய்டு ரோபோட் என்று அழைக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். எப்போது எப்படி சிந்திக்க வேண்டும், முடிவுகளை எப்படி மாற்ற வேண்டும், பழுதான பாகங்களை எப்படி சரி செய்ய வேண்டும் என்று அதுவாகவே சோதனை யோசித்து முடிவுகளை எடுக்கும்.
இந்த இன்சைட் நாளை செவ்வாய் கிரகத்தில் களமிறங்க உள்ளது. நாளை இது மொத்தம் முழுமையாக 6.30 நிமிடங்கள் களமிறங்க எடுத்துக் கொள்ளும் என்று நாசா தெரிவித்துள்ளது. 6.30 நிமிடங்களை மிகவும் பரபரப்பான நிமிடங்கள் என்று நாசா தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment