எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.03.19

Friday, March 29, 2019


திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:196

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.

விளக்கம்:

 பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும்.

பழமொழி

A burnt child dreads fire.

 சூடு கண்ட பூனை அடுப்படி அண்டாது.

இரண்டொழுக்க பண்புகள்

 1. இயற்கை வளங்களை அனைத்தும் கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட கொடை.
2. அவற்றை அழிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம். எனவே இயற்கை வளங்களை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி

வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லறைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! அதிகமான உணர்வதில்,ஏராளமாகக் கற்றுக் கொள்வதில்,நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

  - அப்துல்கலாம்

 பொது அறிவு

1.இந்தியாவில் பரப்பளவில் சிறிய மாநிலம் எது?

 கோவா
                                                      2.லட்சத்தீவுகள் எந்த உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது?

 கேரளம்

வேண்டாம் வெள்ளைச் சர்க்கரை



1. சர்க்கரை வியாதியும் அதிக உடல் எடையும்தான் புற்றுநோய் உருவாக மிக முக்கியக் காரணிகள். இவை இரண்டுக்குமே நேரடிக் காரணம் வெள்ளைச் சர்க்கரை. புற்றுநோய் உருவாகிய பின்னர், புற்று அணுக்கள் உடலினுள் வேகமாக வளர, பிற உறுப்புக்களுக்குப் பரவ, பிறழ்வுபட்ட மரபணு உருவாக முக்கியக் காரணமாக, அறிவியலாளர்கள் சந்தேகிக்கத் தொடங்கி-யிருப்பது வெள்ளைச் சர்க்கரையைத்தான்.

2. சர்க்கரைச் சத்தை தடாலடியாக ரத்தத்தில் கலக்க வைக்கிறது வெள்ளைச் சர்க்கரை. ‘ஒருவேளை உடலில் புற்று அணுக்கள் இருந்தால் அந்தச் செல்களுக்கு வெள்ளைச் சர்க்கரை, முதல் விருந்தாக அமைந்துவிடும். அது வேகமாக புற்று பரவ வாய்ப்பு அளிக்கும்’ என சில அறிவியலாளர்கள் தொடர்ந்து உரக்கச் சொல்லி வருகிறார்கள்.  ‘அப்படி எல்லாம் இல்லை; ஆதாரங்கள் போதுமானதாக இல்லை’ என, இன்னொரு பக்கம் வேகமாக வேறு சில அறிவியலாளர்கள் மறுக்கிறார்கள்.

3. சுக்ருலோஸை அதிகச் சூட்டோடு பயன்படுத்தும்போது அது டயாக்ஸின் போன்ற (டயாக்ஸின் பிளாஸ்டிக் சிதையும்போது வெளியாகும் நேரடிப் புற்றுக்காரணி) நச்சை வெளியிடக்கூடும்’ என அறிவிக்கிறது. ‘Polychlorinated dibenzo-p-dioxins’ எனும் இந்த நச்சு, பழைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் சமைக்கும்போது உருவாகும் வாய்ப்புதான் அதிகமாம்.

English words and Meaning

Incident.   நிகழ்ச்சி
Remember நினைவுபடுத்துதல்
Convenient.  வசதியான
Platform. நடைபாதை
Involve.   ஈடுபாடு

அறிவியல் விந்தைகள்

தக்காளியில் உள்ள லைக்கோபீன் எனப்படும் பொருள்தான் தக்காளியின் சிவப்பு நிறத்துக்கு காரணம்.
*இந்த பொருள் கான்சரை தடுக்கும் தன்மை கொண்டது.
*இதயம் இடப் பக்கம் இருப்பதால் இடப் பக்க நுரையீரல் சற்று சிறியதாக இருக்கும்.
*90%எரிமலை வெடிப்பது லாவா வழிவது எல்லாம் பெருங்கடல்களில்தான்
*நாம் உணர்வதற்கு 10 விநாடிகளுக்கு முன்பே நம் மூளை முடிவெடுத்து விடும். இது ஒன்றே போதும் மனிதன் எப்படி பட்ட அற்புத பிறவி என்று புரிந்து கொள்ள.

Some important  abbreviations for students

* LPG    -   Liquefied Petroleum Gas

* LED - Light Emitting Diode

நீதிக்கதை

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு “உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?” என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

இன்றைய செய்திகள்
29.03.2019

*இங்கிலாந்தில் திப்பு சுல்தானின் துப்பாக்கி ரூ.55¼ லட்சத்துக்கு ஏலம்

*மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக, மேலதிக அரசாங்க தலைமை சட்ட வழக்குரைஞரான, ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

*கவர்னர் மாளிகையில் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
     
*12–வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. அதில் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது.

* டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Tipu Sultan's gun in England is auctioned for Rs.55 lakh

🌸New President of the Court of Appeals, Chief Justice Lawyer and President council Yasantha Gowdoda was sworn in.

🌸The Mahatma Gandhi' life history photo exhibition was initiated by Governor Panwarilal Puroit at the Governor's Palace.
     
🌸The 12th Asian shooter (AKG) championship competition is taking place in China Taipei. Manubakar-Sourabh Chowdhury wins gold with world record

🌸P.V Sindhu qualifies for India in the second round of women's singles second round of India Open Badminton Series.
🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One