எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

Friday, March 29, 2019




வாரத்தில் ஒருநாள்  அனைத்துப் பள்ளி மாணவர்களும்  காலை வழிபாட்டு கூட்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை:  தமிழகத்தில் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்திய தேசிய குற்றவியல் அறிக்கைப்படி, ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் பேர் சாலை விபத்தால் உயிரிழக்கின்றனர்.
இதில், 2017-ஆம் ஆண்டில் மட்டும், 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் 569 பேர் ஆவர். சாலை விதிகளை மீறுவதே இதற்கு முக்கிய காரணம். எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் சாலை பாதுகாப்புத் திட்டம், சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடுதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை  பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி, வாரத்தில் ஒரு நாள்  அனைத்துப் பள்ளிகளிலும், காலை வழிபாட்டுக் கூட்டத்தில், விழிப்புணர்வு வாசகங்களை உறுதிமொழியாக எடுக்க வேண்டும்.
பள்ளி தலைமையாசிரியர்கள், இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியில் சாலை விதிகளைப் பின்பற்றுவேன், நான் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவேன்; நான் பழகிய பின்னரே வாகனம் ஓட்டுவேன்; நான் ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன்; நான் என் பெற்றோருக்கும், ஓட்டுநர்களுக்கும் வாகனம் ஓட்டும் போது, சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்துவேன் என பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியுள்ளன

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One