எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது. தேர்வு வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தது.

Monday, June 24, 2019




முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடந்தது. 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர்(கிரேடு-1) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அறிவித்தது. இதுவரையில் நேர்முக தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல் முறையாக முதுகலை கணினி ஆசிரியர் பணி இடங்களுக்கு ‘ஆன்-லைன்’ முறையில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 23-ந்தேதி (நேற்று) தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு 7 ஆயிரத்து 546 ஆண்கள், 23 ஆயிரத்து 287 பெண்கள் என 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுதுவதற்கான ‘ஹால்-டிக்கெட்’ கடந்த 17-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. ‘ஹால்-டிக்கெட்’, அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதிய சங்கீதா, சாந்தி ஆகியோர் கூறியதாவது:- தேர்வு சற்று எளிதாகவே இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

10 கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருந்த 2 விடைகளும் சரியானது போலவே இருந்தது. மிகவும் புத்திக்கூர்மையுடன் அந்த கேள்வியை அணுக வேண்டியது இருந்தது. நன்கு படித்தவர்களுக்கு தேர்வு முடிவு நிச்சயம் சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு முதல் முறையாக ‘ஆன்-லைன்’ மூலம் நடைபெற்றாலும், கணினி ஆசிரியர் பதவி உயர்வு தேர்வு ஏற்கனவே ‘ஆன்-லைன்’ முறையில் தான் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One