எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கணினி ஆசிரியர் தேர்வில் இணையதள கோளாறால் குளறுபடி  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவிப்பு

Monday, June 24, 2019




கணினி ஆசிரியர் தேர்வின்போது ஏற்பட்ட இணையதள கோளாறு உட்பட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். பாதிப்புள்ள பகுதிகளில் மீண் டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரி யர் தேர்வு வரியம் அறிவித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. அதன்படி முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் தேர்வுக்கு மொத்தம் 30,833 பேர் விண்ணப் பித்தனர். அதில் 23, 287 பெண்களும், 322 மாற்றுத்திறனாளிகளும் அடங் குவர்.

தொடர்ந்து அறிவித்தபடி மாநிலம் முழுவதும் கணினி வழித் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், நாமக்கல், திரு நெல்வேலி உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இணையதள தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை புறக்கணித்து பல்வேறு பகுதிகளில் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த மாவட்டகல்வி அதிகாரிகள் தேர்வர்களை சமாதனம் செய்து, தேர்வை மதியத் துக்கு மாற்றி வைத்தனர். மேலும், சில மாவட்ட மையங்களில் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப் பட்டது. முதல்முறையாக ஒரு போட்டித்தேர்வை டிஆர்பி கணினி வழியில் நடத்தியதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கு மாறாக அரசு சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் தேர்வர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர். மறுபுறம் சென்னை, காஞ்சிபுரம் உட்பட தேர்வு நடைபெற்ற பிற மையங்களிலும் இணையதள வேகம் குறைவாக இருந்தது.

 இதனால் தேர்வை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிப்பதில் சிரமம் இருந்தது. மொத்தம் 150 மதிப் பெண்களுக்கான வினாத்தாள் கடினமாக இருந்ததாகதேர்வர் கள் தரப்பில் கூறப்பட்டது. இந் நிலையில் பாதிப்புள்ள பகுதிகளில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ஒரு சில மையங்களில் கணினி தொழில்நுட்ப கோளாறு காரண மாக சில தேர்வர்கள் தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, தேர்வு மையத்துக்கு வருகைபுரிந்து தொழில்நுட்ப கோளாறால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும்.

தேர்வு நாள் மற்றும் மையங்கள் குறித் விவரங்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாக விரைவில் அனுப்பப்படும். மேலும், தேர்வு மைய விவரங்கள் www.trb.tn.nic.in இணையதளத்திலும் வெளியிடப் படும்” என்று கூறப்பட்டு உள்ளது.மொத்தம் 150 மதிப் பெண்களுக்கான வினாத்தாள் கடினமாக இருந்ததாகதேர்வர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் பாதிப்புள்ள பகுதிகளில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One