எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

75 புதிய மருத்துவக் கல்லூரிகள் புதிதாக தொடங்க அமைச்சரவை ஒப்புதல்!

Thursday, August 29, 2019




நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.24,375 கோடி செலவில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்க்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது; நாடு முழுவதும் வரும் 2021-22 ஆம் ஆண்டிற்குள் புதிதாக 75 மருத்துவக்கல்லூரிகள் துவங்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும். மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.

அடுத்த 5  ஆண்டுக்குள் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் என கூறினார். சர்க்கரை ஏற்றுமதிக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து வரும் 2019-20-ம் நிதியாண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படும். சர்க்கரை ஏற்றுமதி மானியத்திற்காக ரூ. 6,268 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஏற்றுமதி மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறினார். டிஜிட்டல் மீடியா துறையில் மத்திய அரசு ஒப்புதலோடு 25% நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க 1005 நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மேலும் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்ள கட்டமைப்பை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் பேசிய அவர்; நியூயார்க் நகரில் வரும் செப்.,23ம் தேதி நடைபெறும் ஐ.நா.,வின் பருவகால மாநட்டில் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார் எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One