எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் - தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை

Thursday, August 29, 2019




TET நிபந்தனை ஆசிரியர்கள், குறிப்பாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ( TET லிருந்து விடுவிப்பு ) தமிழக அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என TNASSA கூறியுள்ளது.

RTE சட்டம் 23/08/2010 அன்று மத்திய அரசு கொண்டு வந்து அரசு ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு அமலாக்கம் பெற்றது.

ஆனால் தமிழகத்தில் அரசாணை எண் 181 அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் பற்றிய முழுமையான தகவல்கள் அரசு உதவிபெறும் பள்ளிகள் தாளாளர்களுக்கோ அல்லது செயலர்களுக்கோ புதிய பணி நியமனங்கள் தொடர்பாக எந்தவொரு சுற்றறிக்கைகளும் அனுப்பப்படவில்லை என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு. செஞ்சி மயில்வாகனம் கூறுகையில்,

" அரசு உதவிபெறும் பள்ளிகளின் செயலாளர்கள் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் TNTET நிபந்தனைகளில் சிக்கி தவிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் நிலை பற்றி விரிவாக பேசப்பட்டது.
23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டங்களில் நடைபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனங்கள் தொடர்பாகவும், TET நிபந்தனைகள் தொடர்பாகவும் எந்தவொரு முறையான அறிவிப்புகளும் எங்களுக்கு தரப்படவில்லை. TET சிக்கல் இவ்வாறு உள்ளதென்று அன்றே எங்களுக்கு தமிழக அரசு தெரிவித்து இருந்தால் நாங்கள் பணி நியமனங்களே செய்து இருக்க மாட்டோம்.

16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக்கல்வித் துறை இயக்கக செயல்முறைகள் மூலம் மட்டுமே TET நியமனங்கள் பற்றிய அறிவிப்பு எங்களுக்கு கிடைக்கப்பெற்றது.

பணி நியமனம் பெற்ற
அன்று முதல் இன்று வரை இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் சிறப்பான தேர்ச்சி விகிதம் கொடுத்து வந்தாலும் பணிப் பாதுகாப்பு இல்லாமையால் மனதளவில் மிகுந்த வேதனையுடனே பணி பரிந்து வருவதை தினமும் பார்த்து வருகின்றோம்.

TET பணி நியமனங்கள் அனுமதி வழங்கியதில் 16/11/2012 வரை உயர் அதிகாரிகளுக்கும் புரிதல் இல்லாமல் போனதே இதற்கு காரணம்.

தற்போதைய TET வழக்குகள் தாண்டி இந்த சிக்கலை தீர்க்க தமிழக அரசு முன்வந்து TET மூலம் பாதிக்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

மேலும் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றி அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்ல அனைத்து செயலாளர்கள் (TNASSA) சார்பில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One