எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குரூப் 4 தேர்வில் குடியரசு தினம் குறித்த கேள்வியில் தவறு: தேர்வர்கள் அதிர்ச்சி

Monday, September 2, 2019
குரூப் 4 தேர்வில் குடியரசு தினம் எப்போது என கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில் இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் பொருத்துக வடிவில், குடியரசு தினம் எப்போது என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு 1950 ஜனவரி 26 என்பது பதில். ஆனால், கேள்வியில், அளிக்கப்பட்ட 4 விடைகளில் இந்த பதில் இல்லை. இதனால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல், ஆங்கிலத்தில் முதலாவது லோக்சபா கலைக்கப்பட்ட தேதி குறித்த கேள்வி உள்பட 4க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு தவறான பதில் இருந்ததாகவும் தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து கோவையை சேர்ந்த தேர்வர் அருண் கூறுகையில், 'குடியரசு தினம் குறித்த கேள்விக்கு பதிலே இல்லை. மேலும், 1950 ஜனவரி 26 என்பதற்கு பதிலாக 4 ஏப்ரல் 1957 என கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால், குழப்பமாக இருந்தது. இதே போல், நான்குக்கும் மேற்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது. இந்த தவறுகளுக்கு தேர்வாணையம் பொறுப்பேற்று உரிய மதிப்பெண்ணை அனைவருக்கும் வழங்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One