எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

Friday, September 6, 2019


முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில், நேற்று, அவரது, 132வது பிறந்த நாளையொட்டி, திருவுருவ சிலைக்கு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடக்க கல்வி, திருத்தணி, ஆலமரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மேல்நிலை கல்வி, திருத்தணி, காந்தி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். மேலும், அதே பள்ளியில், ஆசிரியராகவும் பணியாற்றினார்.இந்நிலையில், டாக்டர் ராதாகிருஷ்ணனின், 132வது பிறந்த நாளையொட்டி, அவர் படித்து, பணியாற்றிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு, திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர், பழனிசேகர், திருத்தணி, எம்.எல்.ஏ., நரசிம்மன் உட்பட பலர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியைகளுக்கு மாணவியர் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடக்க கல்வி கற்ற, ஆலமரம் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள, அவரது சிலைக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, மலர் மாலை அணிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One