எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் 20ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டிய அரசுப்பள்ளி ஆசிரியை..

Wednesday, April 8, 2020




    அன்னவாசல்,ஏப்.8:     கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில்  20 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசுப்பள்ளி ஆசிரியரை இலுப்பூர்  மாவட்டக்கல்வி அலுவலர் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் கல்வி மாவட்டம்,வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிபவர் சுமதி.இவர் இப்பள்ளியில் படிக்கும் 20ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி,அதற்கு உண்டான மளிகைப்பொருட்களையும் தனது சொந்த செலவில் இலவசமாக வழங்கினார்.
கொரானோ ஊரடங்கு காலத்தில் உதவி கரம் நீட்டிய ஆசிரியை சுமதிக்கு  மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் அவரை  இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன்,பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,பள்ளியின் தலைமையாசிரியை  ராணி மற்றும் ஊர்பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One