எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 16-09-2019

Monday, September 16, 2019




இன்றைய திருக்குறள்*
*குறள் எண்- 718*
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
மு.வ உரை:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
கருணாநிதி  உரை:
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*

நல்ல சமுதாயம் உருவாக ஆசிரியர்களும், பெற்றோர்களும், தலைவர்களும் தமது நடத்தைகளை கவனித்து நடக்க வேண்டும். ஏனென்றால் மாணவர்களும் தம்மைப் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
  - அப்துல் கலாம்
♻♻♻♻♻♻♻♻
*Important  Words*
Ringworm படை
Psychosis மனக் குழப்பம்
Wart மரு
One Eyed ஒற்றைக் கண்
Long Sightedness தூரப் பார்வை
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*பழமொழி மற்றும் விளக்கம்*
*கோல் ஆட குரங்கு ஆடும்.*
நாம் அறிந்த விளக்கம் :
எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
நல்லொழுக்கங்களையும்இ நல்ல பண்புகளையும் வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும். அப்போது தான் அதனை கடைபிடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் ஆகும்.
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1. கண்ணீர் வரவழைக்கும் வெங்காய வேதிப்பொருள் என்ன?
*அலைல் சல்பைடு*
2. இரத்தத் தட்டுகள் குறைவதற்கு பெயர் என்ன?
*திரோம்போபினியா*
📫📫📫📫📫📫📫📫
*விடுகதை*
1. நீண்ட உடலிருக்கும், தூணும் அல்ல; உடலில் சட்டை இருக்கும், ஆனால் உயிர் இல்லை; துயிலில் சுகம் இருக்கும், மெத்தை அல்ல; அது என்ன?
*தலையணை*
2. தலை போனால் மறைக்கும், இடை போனால் குறைக்கும், கால் போனால் குதிக்கும், மூன்றும் சேர்ந்தால் முந்தி ஓட்டம் பிடிக்கும். அது என்ன?
*குதிரை*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*வேப்பமரமும்... சிறுவனும்*
வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட மரம் தம்பி ஏன் அழறே என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததுமே முதலில் பல் தேய்த்துவிட்டு வா என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி என்று கண்டிக்கிறார். பின் குளித்து முடித்து பசிக்கலை என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.
பள்ளிக்கு வந்தாலோ பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க. எல்லாருமே என்னை நாள் முழுக்க திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை என்றான் அழுது கொண்டே.
வேப்பமரம் என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா? என்றது. ஓ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன். ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.
நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அது போல் பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.
நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T. தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
TN டிஜிட்டல் டீம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*செய்திச் சுருக்கம்*
🔮இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்.
🔮கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேரின் உடல்கள் மீட்பு.
🔮தமிழகம்நாகர்கோவிலில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம்: டவுண் ரயில் நிலையத்தில் மேம்பால பணி நிறைவு.
🔮ஆவின் பால் விலையை தொடர்ந்து, ஒரு சில பால் உப பொருட்களின் விலையும் உயர்கிறது.
🔮தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
🔮உலக குத்துச்சண்டையில் இந்தியாவின்  அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்.
🔮16 tourists rescued, 40 missing as boat capsizes in Godavari river in Andhra Pradiversion.
🔮Tiruvallur-Bengaluru R-LNG pipe: Green nod for forest diversion.
🔮Doordarshan Turns 60: Twitterati Takes Trip Down Nostalgia Lane.
🔮India urges Pakistan to adhere to 2003 ceasefire agreement.
🔮Pankaj Advani, on Sunday increased his tally of world titles to 22 by winning a fourth straight final in the 150-up format at the IBSF World Billiards Championship

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One