எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா சேவை தொடக்கம்

Tuesday, August 28, 2018

ஒரு நேரத்தில் கரண்ட் பில், டெலிபோன் பில் உட்பட பலவற்றுக்கும்
மணிகணக்கில் க்யூவில் நிற்கும் நிலை. ஆனால் இப்போது அப்படியா விநாடி நேரத்தில் கட்டி முடித்துவிடுகிறோம். இருந்த இடத்தில் இருந்து கொண்டே. அந்தளவிற்கு டிஜிட்டல் டெக்னாலஜி உயர்ந்து நிற்கிறது.


5G இந்தியாவில் சாத்தியமா? இந்தியா முன் இருக்கும் சவால்கள்!

இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் 5G
அறிமுகமாகிவிடும் எனச் சொல்கிறது அரசு; அது சாத்தியமானால் 2022-க்குள் நம் எல்லோர் கையிலும் 5G இருப்பது நிச்சயம். தற்போது இருப்பதை விடவும் அதிவேக இணையம், கிராமப்புறங்களில்கூட தரமான வாய்ஸ் குவாலிட்டி, மெஷின் டு மெஷின் இடையேயான அதிவேகத் தகவல் பரிமாற்றம் என நம் தகவல்தொடர்பு முறையை நிச்சயம் 5G அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும். ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக 5G-யைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை. அரசுக்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையேயே தற்போது நிறைய முட்டல் மோதல்கள் நடந்துவருகின்றன; தற்போதைய 4G சந்தையிலேயே இன்னும் கடும்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கையில் எப்படி 2020-க்குள் 5G-யை கொண்டுவரப்போகிறது மத்திய அரசு? தற்போது தொலைத்தொடர்புத் துறையில் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன?
தரநிர்ணயம்
2G, 3G,4G என எதுவாக இருந்தாலும் அவை எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சர்வதேச அமைப்புகள்தான் முடிவுசெய்யும். அப்படி 5G-க்கான தரத்தை 3GPP எனும் அமைப்பே நிர்ணயம் செய்யும். அதன்பிறகே தொழில்நுட்ப நிறுவனங்கள் அதனைப் பின்பற்றும். தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G-யின் தரநிர்ணயமானது 2008-ம் ஆண்டு இறுதிசெய்யப்பட்டது. பின்னர் முதன்முதலாக ஸ்வீடனில் 4G அறிமுகமானது; அதன்பின்பு 2012-ல் 4G இந்தியாவிற்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நாம் காணும் 4G-யின் வளர்ச்சி இப்படித்தான் தொடங்கியது. இதேபோலத்தான் 5G-யும் இந்தியாவுக்கு வரும்.
5G-க்கான முதல்கட்ட தர்நிர்ணயமானது இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இறுதிசெய்யப்பட்டு வெளியானது. இனி இந்த தரத்தில் செயல்படவேண்டிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு. இதுதவிர இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னொரு கடமையும் உண்டு. அது, இந்தியாவிற்கேற்றபடி 5G நெட்வொர்க்கை அமைப்பது; உதாரணமாக, கிராமப்புறங்களில் குறைவான நபர்களே இருப்பார்கள்; எனவே அவர்களுக்காகக் குறைவான டவர்களே வைப்பார்கள். இதனால் அங்கே கால் குவாலிட்டியில் தரம் குறைவாக இருக்கும். இதுதான் தற்போதைய நிலை. ஆனால், 5G நெட்வொர்க்கில் இது இருக்கக்கூடாது என்பதும் ஒரு விதி. இதனை இந்திய விஞ்ஞானிகள் 3GPP-யிடம் பரிந்துரைத்து, அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, இந்தியாவில் 5G நெட்வொர்க்கை அமைக்கும் நிறுவனங்கள், கிராமப்புறங்களிலும் தரமான சேவை கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இந்த விதிக்கு டெக்னிக்கலாக Low Mobility High Coverage எனப்பெயர். இப்படி 5G தரத்திற்கான தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கவேண்டியது முதல் சவால்.


வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்


ஹெல்மெட்' இல்லா பயணியர் அபராதம் வசூலிக்க உத்தரவு

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும், கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். அணியாமல் செல்வோருக்கு, அபராதம் வசூலிக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழக அரசின் சார்பில் 960 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''தமிழ் வழியில் படித்த, 960 மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.


38 படிப்புகளுக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் : TNOU துணைவேந்தர் தகவல்


தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பயமில்லா கற்றல்' சுவரொட்டிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் வெளியிட்டார்


890 பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்கள் திண்டாட்டம்


எம்.இ., - எம்.டெக்., படிப்பு: இன்று கவுன்சிலிங் துவக்கம்


அரசு பள்ளிகளை தத்தெடுக்க பலர் ஆர்வம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28


ஆகஸ்ட் 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான்.
632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது.
1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர்.
1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
1619 – இரண்டாம் பேர்டினண்ட் புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1640 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசின் இராணுவம் நியூபர்ன் போரில் இசுக்கொட்டியப் படைகளிடம் தோற்றது.
1648 – இரண்டாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: கொல்செஸ்டர் மீதான 11-கிழமை முற்றுகை நிறைவடைந்தது. அரசுப் படைகள் நாடாளுமன்றப் படைகளிடம் சரணடைந்தன.
1709 – மணிப்பூர் மன்னராக பாம்கீபா முடிசூடினார்.
1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
1810 – கிராண்ட் போர்ட் சமரில் அரச கடற்படைக் கப்பல்கள் பிரான்சிடம் சரணடைந்தன.
1833 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.
1844 – பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
1849 – ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிசு ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
1859 – 1859 சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.
1867 – ஐக்கிய அமெரிக்கா ஆளில்லா மிட்வே தீவுகளைக் கைப்பற்றியது.
1879 – சூலுக்களின் கடைசி மன்னன் செட்சுவாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
1913 – நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: அரச கடற்படை செருமானியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.
1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.
1916 – முதலாம் உலகப் போர்: செருமனி உருமேனியா மீதும், இத்தாலி செருமனி மீது போரை ஆரம்பித்தன.
1924 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.
1963 – மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
1964 – ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.
1968 – சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.
1988 – செருமனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
1990 – குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
1990 – சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.
1993 – கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.
1996 – வேல்ஸ் இளவரசர் சார்லசு, இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
1998 – பாக்கித்தானின் நாடாளுமன்றம் "திருக்குர்ஆன், நபிவழி" ஆகியவை "அதியுயர் சட்டம்" என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.
1998 – இரண்டாவது காங்கோ போர்: காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.
2006 – திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 – இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

பிறப்புகள்

1592 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628)
1749 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1832)
1855 – நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
1863 – அய்யன்காளி, இந்திய சாதிய எதிர்ப்பு செயற்பாட்டாளர் (இ. 1914)
1899 – ஜேம்ஸ் வாங் ஹோவ், சீன அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 1976)
1928 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (இ. 2016)
1932 – யாகிர் அஹரோனோவ், இசுரேலியக் கல்வியாளர்
1934 – ஏ. பி. கோமளா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1957 – ஈவோ யொசிப்போவிச், குரோவாசியாவின் 3வது அரசுத்தலைவர்
1957 – ஐ வெய்வே, சீனச் சிற்பி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்
1959 – சுமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1964 – இளவரசு, தென்னிந்திய நடிகர் , ஒளிப்பதிவாளர்
1965 – ஷானியா ட்வைன், கனடியப் பாடகி
1969 – ஜேக் பிளாக், அமெரிக்க நடிகர்
1982 – பிரசன்னா, தமிழகத் திரைப்பட நடிகர்
1983 – லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாளர்
1986 – கிலாத் ஷாலித், இசுரேலியப் போர்வீரர், ஊடகவியலாளர்


இறப்புகள்

430 – ஹிப்போவின் அகஸ்டீன், அல்சீரிய மெய்யியலாளர், புனிதர் (பி. 354)
632 – பாத்திமா, முகம்மது நபியின் மகள் (பி. 605)
1891 – ராபர்ட் கால்டுவெல், ஆங்கிலேய மதப்பரப்புனர், மொழியியலாளர் (பி. 1814)
1973 – முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)
2012 – சுலாமித் பயர்சுடோன், கனடிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1945)

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துங்க... நவம்பர் 15-இல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்!


சென்னை: பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என நவம்பர் 15-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.18

திருக்குறள்


தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

விளக்கம்:

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாது.

பழமொழி

Be a Roman when you are in Rome

 உலகத்தோடு ஒத்து வாழ்

இரண்டொழுக்க பண்பாடு

1.  எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.

2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

 பொன்மொழி

சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்திற்கு நாம் தரக்கூடிய ஒரே இலக்கணம்.

            - விவேகானந்தர்

பொது அறிவு

1.மாரத்தான் ஓட்டம் என்பது எவ்வளவு தூரம்?

  42.195கிலோமீட்டர்

 2.2018 காமன்வெல்த் போட்டிகள் எங்கு நடைபெற்றன ?
 
 ஆஸ்திரேலியா

English words and. Meanings

Religion.          மதம்
Recommend  பரிந்துரை
Release.        விடுவித்தல்
Radiation.        கதிர்வீச்சு
Reminder.      ஞாபகப்படுத்துதல்

EMIS வலைதளத்தில் தற்போது மாணவர்களின் பெயர்களை தமிழில் டைப் செய்வதற்கு தேவையான Google chrome extension எவ்வாறு தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்த வேண்டும் -வழிமுறைகள்



அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் பணி மாறுதலில் முன்னுரிமை - அமைச்சர் செங்கோட்டையன்


DSE - பள்ளிக்கல்வி -பருவ மழையை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இயக்குநர் உத்தரவு!!


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 28-08-2018

Monday, August 27, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

உரை:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

பழமொழி :

As you Sow, so You Reap

வினை விதைத்தவன் விதை அறுப்பான்

பொன்மொழி:

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத்
தொடர்ந்து வரவேண்டும்.

 -மான்ஸ்பீல்டு.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்?

2200 முறை

2.கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

5 வது இடம்


நீதிக்கதை :

பேராசையால் உயிரிழந்த கொக்கு


வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.

ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது.

“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.

‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.

“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.

ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.



 குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.

அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.

வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு.

கணிதம் கற்பித்தலில் அரசு பள்ளி ஆசிரியரின் சாதனை..!


கணிதம் இன்றும் பல மாணவர்களுக்கு விருப்பமான பாடமாக இல்லாமல் இருப்பதற்கு காரணம் எளிமையாக புரிந்துகொள்ள இயலாமையே..! ஆனால், கணிதத்தை எளிய முறையில் கற்க முடியும் என்னும் நம்பிக்கையை வளர்ப்பது அவற்றை கற்பிக்கும் ஆசிரியரின் கையிலே உள்ளது.

தன் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையும், அதனை எவ்வாறு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையும் அறிந்து இருப்பவரே சிறந்த ஆசிரியர். அதை புரிந்து கொண்டு கணிதம் ஒரு கடினமான பாடமாக நினைக்காமல் எளிய முறையில் அனைத்து தரப்பு மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் கற்பித்து வருகிறார் ரூபி தெரஸா என்னும் அரசு பள்ளி ஆசிரியர்.



நம் நாட்டில் அரசு பள்ளி, அதிலும் தமிழ் வழிக் கல்வி என்றால் குழந்தைகளுக்கு பயன் அளிக்காது, அரசு பள்ளியில் சிறந்த கல்வி கற்பிக்கமாட்டர்கள் என்று மக்களின் ஆழ் மனதில் இருக்கும் எண்ணத்தை தங்களின் கற்பிக்கும் செயல்களின் மூலம் தகர்த்தெறிய ரூபி கேத்தரின் தெரஸா போன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களின் திறமைகள் வெளியுலகிற்கு வருவதில்லை.



ரூபி கேத்தரின் தெரஸா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக திறன்மிகு ஆசிரியர் பணியில் இருக்கும் இவர் 10 ஆண்டுகளாக அரசு பள்ளியில் பணி செய்து வருகிறார்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிக்கு வருவதே அரிது..! சிரமங்களை கடந்து கல்வி கற்க வரும் பிள்ளைகள் பள்ளி பாடத்திலும் பல சிரமங்களை சந்திக்கின்றனர். அரசு பள்ளியின் நிலை பற்றி நாம் நன்கு அறிந்ததே. அரிதாக வரும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் பாடம் எம்முறையில் எளிமையாக கற்பித்தால் நன்றாக நினைவில் நிற்கும், சிரமமின்றி கற்க முடியும் என்ற வழியை கண்டறிந்தார் ரூபி ஆசிரியர்.



கணக்கு பாடத்தை மனப்பாடம் செய்வதில் எந்த பயனுமில்லை என்பதை அறிந்து, அதற்காக புதிய வழியை கண்டறிந்தார். வாய்பாடு, கூட்டல், கழித்தல், பெருக்கல் என தொடங்கி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் வரை அனைவரையும் குழம்ப வைக்கும் சமன்பாடுகள், தேற்றங்கள், அளவியல் உள்ளிட்ட பல பிரிவுகளையும் எளிய செயல்முறையில் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.

  “ படைப்பாற்றலுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2017-ஐ பெற்றுள்ளார் ரூபி கேத்தரின் தெரஸா ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது “ . 2018-ல் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களிடம் இருந்து " கனவு ஆசிரியர் விருதை " பெற்றுள்ளார்.

மாணவர்களுக்கு கற்பிக்கும் எளிய முறையை வீடியோக்கள் எடுத்து வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார் ரூபி ஆசிரியர். இதற்காக பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து ஊக்கமளித்துள்ளனர். அதன்பின் ரூபி ஆசிரியர் தனது மகனின் உதவியுடன் Rubi Theresa என்கிற பெயரில் youtube சேனல் ஒன்றை தொடங்கி எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.


இதுவரை 550-க்கும் அதிகமான வீடியோக்கள் அந்த சேனலில் குவிந்து கிடக்கின்றன. இவரின் youtube வீடியோக்கள் பல நாடுகளில் பல மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சிறந்து விளங்குகிறது. அதுமட்டுமின்றி rubitheresa.blogspot.in என்ற வலைத்தளத்தில் 10-ம் வகுப்பு மற்றும் rubi Theresa-primary.blogspot.in என்ற வலைத்தளத்தில் அடிப்படை கணக்குகளையும் எளிமையாக விவரிப்பதை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.



ரூபி ஆசிரியர் எளிய முறையில் கற்பிக்கும் கணித செயல்முறைகள் வாட்ஸ் ஆப், இணையதளம், youtube வீடியோ மட்டுமின்றி செயலி(app) வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற தளங்கள் போல ஆஃப் மூலமாகவும் கணித வீடியோக்களை பார்த்து கற்றுக் கொள்ள ஏதுவாக RUBI MATH App இலவசமாக Youturn சார்பில் உருவாக்கப்பட்டது. சென்ற ஆண்டு Rubi Math என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அறிமுகப்படுத்தினார். அதில், Youturn-ன் பங்களிப்பு செய்தது பெருமையாக இருந்தது. Rubi Math செயலி அறிமுகப்படுத்திய நேரத்தில் Youturn சார்பில் திரு. ஐயன் கார்த்திகேயன் பங்குபெற்று அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.


TNSchools- Android Apps -Some of Problem & Solution



பென்சில் துண்டில் ஒரு சாதனை முயற்சி ! என்ன அது ?


மிக நுண்ணிய 0.05 எம். எம் பென்சிலில் A முதல் Z வரை செதுக்கி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள பொறியியல் பட்டதாரி பெண் அசத்தியுள்ளது.

சென்னை அடுத்த மேடவாக்கத்தை சேர்ந்தவர் விஜயபாரதி இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்த விஜயபாரதி பென்சிலில் மிக சிறிய அளவிலான சிலைகளை செதுக்குவதை சமூக வலைதளங்களில் பார்த்து அதில் ஆர்வம் ஏற்பட்டு தானும் பென்சிலில் மிகச்சிறிய அளவிலான சிலைகளை செதுக்க வேண்டும் என எண்ணி கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சி பெற்றுவருகிறார்.


CPS சந்தாதாரர் கவனத்திற்கு.... முக்கிய அறிவிப்பு!




ஆங்கிலத்தில் டைப் செய்யாமல் தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது என்பதை விளக்கும் வீடியோ


ஆங்கிலத்தில் டைப் செய்யாமல்  தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது என்பதை விளக்கும் வீடியோ

TRB - சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி


சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-29 "பந்தைப்பிடி" (27.08.2018)



ஆங்கிலம் அறிவோம்

ஆங்கிலம் அறிவோம்


The sun rises in _________.

a) east b) the east c) East d) the East

பொதுவாகத் திசைகளைக் குறிக்கும்போது அவற்றின் தொடக்கத்தை capital letter-ல் எழுதுவதில்லை. மாறாக east, southwest என்பதுபோல்தான் குறிப்பிடுகிறோம்.


கணிதப்புதிர்



கணிதப்புதிர்

ஒவ்வொரு பூவிலும் ஒரு கிளி உட்கார்ந்தால் ஒரு கிளிக்கு பூ கிடைக்காது. ஒரு பூவுக்கு இரண்டு கிளிகள் உட்கார்ந்தால்ஒரு பூ மீதம் உள்ளது. மொத்தம் எத்தனை கிளிகள்? எத்தனை பூக்கள்?

பின் புறம் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு


இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவினால், சென்னையில் தலைக்கவசம் (ஹெல்மெட்) விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
 இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
 இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது.
 இந்த நடவடிக்கையின் விளைவாக, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணியத் தொடங்கியிருக்கின்றனர். இதில் தலைக்கவசம் இல்லாதவர்கள், கடைகளை தேடிச் சென்று தலைக்கவசம் வாங்கி வருகின்றனர். இதனால் தலைக்கவசம் விற்பனை விறு,விறுப்பு அடைந்துள்ளது.
 சென்னையில் உள்நாட்டு தயாரிப்பு தலைக்கவசங்களை தவிர்த்து, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தலைக்கவசங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
 விலை ரூ.600 முதல் ரூ.20,000: சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள கடைகளில் சாதாரண தலைக்கவசம் முதல் அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.100 வகையான தலைக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ரூ.600 முதல் ரூ. 20,000 விற்கப்படுகிறது. தலைக்கவசங்களின் விலைக்கு ஏற்றார்போல, அதில் நவீன வசதிகளும், அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளன. அதேவேளையில் ஆர்டரின்பேரில் பல அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசங்கள் செய்தும் கொடுக்கப்படுகின்றன. இந்த தலைக்கவசங்கள் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.



தொலைநிலைக் கல்வி வழி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகள் செல்லுமா?


புதிய பாடத் திட்டம் மூலம் கல்வி மேம்படும்


சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


வரலாற்றில் இன்று 27.08.2018


ஆகஸ்டு 27 (August 27) கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1689 – இரசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது.
1776 – பிரித்தானியப் படைகள் லோங் தீவில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
1813 – ஆஸ்திரியா, ரஷ்யா, மற்றும் புரூசியா படைகளை நெப்போலியன் “டிறெஸ்டென்” என்ற இடத்தில் தோற்கடித்தான்.
1816 – அல்ஜியேர்ஸ் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
1828 – ரஷ்யப் படை “அக்கால்சிக்” என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.
1828 – பிரேசிலுக்கும் ஆர்ஜெண்டீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவாய் தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
1859 – பென்சில்வேனியாவின் “டிட்டுஸ்வில்” என்ற இடத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.
1881 – புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
1883 – இந்தோனீசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1896 – ஆங்கிலோ-சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 – 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
1916 – முதலாம் உலகப் போர்: ருமேனியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர் ஜெர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1921 – 1916 இல் ஓட்டோமான் பேரரசுடன் போரிட்ட செரீப் உசைன் பின் அலி என்பவரின் மகனை பிரித்தானியர் ஈராக்கின் மன்னனாக ஈராக்கின் முதலாம் பைசல் என்ற பெயரில் அறிவித்தனர்.
1928 – போருக்கெதிராக கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.
1952 – லக்சம்பேர்க்கில் மேற்கு ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.
1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.
1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.
1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐஆர்ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1982 – துருக்கிய இராணுவ உயர் அதிகாரி அடில்லா அட்லிகாட் என்பவர் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.
1985 – நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது.
2000 – மொஸ்கோவின் ஒஸ்டான்கினோ கோபுரம் தீப்பற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக 55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
2006 – அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களைசேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்


நல்லாசிரியர் விருதுக்கு கடும் கட்டுப்பாடு சிபாரிசுக்கு அடிபணியாதீர் என அறிவுரை!

தமிழக நல்லாசிரியர் விருதுக்கும், மத்திய அரசை போல, முழுமையாக விசாரணை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்; சிபாரிசுக்கு அடி பணியக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய அரசின் சார்பில்,ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் மற்றும் பணபலம் உள்ளிட்ட செல்வாக்கு பெற்றவர்களுக்கே விருதுகள் கிடைத்தன. தகுதியான ஆசிரியர்களுக்கு விருது கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால், 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு, ஓரளவு தகுதியானவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.


சிப் அடிப்படையிலான புதிய ATM கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு SBI அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அழைப்பு

இப்போது பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, 'சிப்' அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
இதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விளையாட்டு சார்பாக செல்லும்போது அவர்களுக்கு உணவுப்படி ரூபாய் 125+பயணப்படி வழங்க வேண்டும் ஆணை.


பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்


IGNOU பல்கலையில் ஆக,31 வரை சேர்க்கை

இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகள், தொலைநிலை கல்வியில் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


EMIS பதிவு, 31ம் தேதி கடைசி


பிளஸ் 2 துணை தேர்வு,தனி தேர்வர்களுக்கு விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று
முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.பிளஸ் 2 தேர்ச்சிக்கான
இந்தத் துணை தேர்வு, செப்., 24 முதல், அக்., 4 வரை நடைபெற
உள்ளது.தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும்
விபரம், www.dge.tn.gov.in என்ற, இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.


இந்த தேர்வுக்கு, வரும், 1ம் தேதி வரை, தேர்வுத் துறை
சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
தவறும் விண்ணப்பதாரர்கள், 'தட்கல்' முறையில்,
செப்., 3, 4 ல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆக.31 வரை மருத்துவ முகாம்


இன்ஜி., துணை கவுன்சிலிங் : சுயமாக இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தல்

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரி காலியிடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில், இடைத்தரகர் தலையீடு இன்றி, இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
98 ஆயிரம் காலியிடங்கள் : அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, சிறப்பு மற்றும் பி.ஆர்க்., பிரிவினருக்கு, நேரடியாக ஒற்றை சாளர கவுன்சிலிங் நடந்தது. பொது பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைன் முறையிலான கவுன்சிலிங், ஆக., 20ல் முடிந்தது.கவுன்சிலிங் முடிவில், இந்தாண்டு இன்ஜி., படிப்புக்கு, 72 ஆயிரம் பேர் சேர்ந்தனர்; 98 ஆயிரம்இடங்கள் காலியாக உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 துணை தேர்வு எழுதியோர் மற்றும் கலை கல்லுாரிகளில் சேர்ந்து, மீண்டும் இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்புவோருக்கு, துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


நீண்ட இழுபறிக்கு பின் கலந்தாய்வு அறிவிப்பு


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.08.18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.08.18

திருக்குறள்


அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.

விளக்கம்:

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

பழமொழி

Humility is the best virtue

 பணிவு என்பது மிகச்சிறந்த பழக்கம்

இரண்டொழுக்க பண்பாடு

1.  எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.

2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

 பொன்மொழி

தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.

   - சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு

1. 2014 ஆசிய விளையாட்டு போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது ?

 தென்கொரியா
                       
 2.தற்பொழுது 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் எந்த
 நடைபெற்றுவருகிறது ?

 இந்தோனேசியா

English words and. Meanings

Quickly     விரைவாக
Queries.    விசாரிப்பு
Quarter.     கால்பகுதி
Quality.       தரம்
Quantity.     அளவு



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 27-08-2018

Sunday, August 26, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

உரை:
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

பழமொழி :

As rare as hen’s teeth

அத்தி பூத்தார் போல்

பொன்மொழி:

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம்.

-சிம்மன்ஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்?
44%

2.எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்?
மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்


நீதிக்கதை :

உதவி:-



கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.

கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது.


மாணவர்களிடம் மொழிப்பற்றையும் மொழியின் மீது ஆசையையும் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்...முனைவர் தமிழ் பயிற்றுநர் மு.கனகலட்சுமி பேட்டி..


தேவகோட்டை,ஆக.26: மாணவர்களிடம் மொழிப்பற்றையும் மொழியின் மீது ஆசையையும் வளர்க்க வேண்டும்.அப்படி ஆசிரியர்களாகிய நாம் செய்தால் மாணவர்கள் தானாக சிந்திக்கவும்,தமிழ் மொழியில் வாசிக்கவும் எழுதவும் செய்வார்கள் என தமிழ்பயிற்றுநர் முனைவர் மு.கனகலட்சுமி கூறினார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிமையாக தமிழை கற்றுக்கொடுப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது..
பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றுப் பேசினார்.
பயிற்சி வகுப்பினை பள்ளித் தலைமை ஆசிரியர்
 லெ.சொக்கலிங்கம்  தொடங்கி வைத்துப் பேசினார் ..ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மங்களேஷ்வரி முன்னிலை வகித்தார்.

பயிற்சி வகுப்பில்  தமிழ் பயிற்றுநர் முனைவர்
 மு.கனகலட்சுமி கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் கூறியதாவது: தமிழை தமிழாக படித்தால் தமிழ் எளிது.தமிழை யாரும் எளிமைப்படுத்த வேண்டாம்..ஏனெனில் தமிழ் மொழியே எளிமையான மொழி தான்..எழுத்து கூட்டி வாசிக்காத நிலை,சரியான உச்சரிப்புடன் தெளிவுடன் வாசித்தல்,பிழையில்லாத கையெழுத்து,உலகெங்கும் ஒரே தமிழ் இந்த பயணத்தில் ஆசிரியர்களோடு எனை இணைத்துக் கொண்டு மொழியை வளர்க்க வேண்டிய கால கட்டத்தில் மொழிக்கான வேரில் உரமிட்டுக் கொண்டிருக்கிறேன்..சொற்பொழிவு,பட்டிமன்றம்,இலக்கிய மன்றம் என பல அறிஞர்களும்,கவிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்..ஆனால் அடிப்படை தமிழ் எழுத்துகளை உச்சரிக்கவும்,எழுதவும் முறையான ஆய்வு பல ஆண்டுகளாக நம் தமிழகத்தில் இல்லை..எனவே தற்போது தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் என்னும் தலைப்பில் 18 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு இறுதி 4 ஆண்டு காலம் கள ஆய்வு செய்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டய படிப்பு முடித்துள்ளேன்.அதன் பிறகு தான் இந்த ஆய்வு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செயல்படுத்தி  வெற்றி பெறப்பட்டு இன்று பல மாவட்டங்களில்  பல ஆசிரியர்கள்  உச்சரிப்பை தெளிவாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..தமிழ் வாசிப்புத் திறனில் கள ஆய்வுப் பணியில் முன்னோடியாக நான்  இருப்பதால் எழுத்துக்கள் பற்றி ஆய்வை மேற்கொள்ளும்  ஆய்வாளர்களாக ஆசிரியர்கள் பலர் வர வேண்டும் என்பதே தனது நோக்கம்..மொழியை காக்கும் சூழலில் ஆசிரியர்களாகிய நாம் இருக்கிறோம்.எனவே நாம் முதலில் நம் தமிழ் மொழியை காக்க வேண்டும்.பின்னர் மாணவர்களிடம் மொழிப்பற்றையும்  மொழியின் மீது ஆசையையும் வளர்க்க வேண்டும்.அப்படி ஆசிரியர்களாகிய நாம் செய்தால் மாணவர்கள் தானாக சிந்திக்கவும, தாய் மொழியில் வாசிக்கவும் எழுதவும் செய்வார்கள்..மாணவர்களை மதிப்பீடு செய்யும் பொழுது படத்தின் வாயிலாக மதிப்பீடு செய்ய வேண்டும்..மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும்...நம் எண்ணங்கள் எந்த அளவுக்கு நல்லதாக உள்ளதோ,நம் எண்ணங்களில் எந்தளவுக்கு தன்னம்பிக்கை உள்ளதோ அந்தளவுக்கு தான் நம் வாழ்வும் உயரும். எனவே மாணவர்களாகிய நீங்கள் நல்லவர்களாகவும் நேர் சிந்தனை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்...



உதயச்சந்திரன் பணி மாற்றம் நீதிமன்ற அவமதிப்பாகும்! - கே.பாலகிருஷ்ணன்


பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய த.உதயச்சந்திரன், அத்துறையின் பாடத்திட்ட செயலாளராக மட்டும் பணியாற்றுமாறு மாற்றப்பட்டார். இந்நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்தும் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார் செய்யும் அளவுக்கு பாடத்திட்டக்குழு பணியாற்றி வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்தப்பணியின் காரணமாக 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன.

முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு!


முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அதனை மேம்படுத்தி சேவை செய்ய முன்வர வேண்டும்.


தமிழில் டைப் செய்யாமல் தமிழில் தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது ?


தமிழில் டைப் செய்யாமல் தமிழில் தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது என்பதை விளக்கும் வீடியோ





Click here to watch video

T.தென்னரசு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர்.

Click here to download  link 


This application convert what ever you speak in Tamil into Tamil Text.

Want Tamil text without typing then download this application and get work done. Just speak in Tamil language and get all your text.

Use power of your voice and get rid of lengthy typing. What you speak you get by this application.


சனிக்கிழமை வேலை நாள் : பெயரளவிற்கு இயங்கிய பள்ளிகள்

மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பு, நேற்று முன்தினம் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அனைத்து பள்ளிகளும் மிகக்குறைந்த மாணவர்களுடன் இயங்கின.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கல்வித்துறை நாட்காட்டி அடிப்படையில் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினமாகும்.

இருப்பினும் வேலை நாட்களில் வேறு காரணங்களுக்காக அரசு விடுமுறை அறிவித்திருந்ததால் அதை சமன் செய்ய நேற்று பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு தலைமையாசிரியர்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தியாக வந்தது.கல்வித்துறையில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பும் வசதி இல்லை. இதனால் மாலை 4.10 மணிக்கு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல்அனுப்பப்பட்டு அதன்பிறகு சில நிமிடங்களில் நிர்வாகிகள் மூலம் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் 4.10 மணிக்கு பள்ளி முடிந்து மாணவர்கள் வெளியேறி விட்டனர். இதனால் நேற்று பள்ளி இயங்கும் என மாணவர்களுக்கு தெரியப்படுத்த முடியவில்லை.நேற்று முழு நேரம் பள்ளிகள் இயங்கிய நிலையில் சுமார் 25 சதவீத மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.



எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One