சத்யம் பயோ கம்பெனி குழுவின் நேர்முகத் தேர்வு 2021 (Campus Interview)
Saturday, September 4, 2021
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியான புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 02.09.2021 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு 2021 (Campus Interview) காணொளிக் காட்சி மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த சத்யம் பயோ கம்பெனி குழுவானது (Sathyam Group of Companies, Madurai) நேர்முகத் தேர்வினை நடத்தியது.
இந்த காணொளிக் காட்சி நேர்முகத் தேர்வில், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் மாணவர்கள் பலர் மதுரை – சத்யம் பயோ கம்பெனியின் களப்பணி அலுவலர் மற்றும் விற்பனை ஒருங்கிணைப்பாளராக தேர்வு பெற்றுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள தங்களது கிளை நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மதுரை – சத்யம் பயோ கம்பெனி தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு படித்து முடித்ததும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வினை, புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் ஜெ.பிரசாந்த், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு பொறுப்பு வகிக்கும் N. திவ்யபாரதி மற்றும் சத்யம் குழுமத்தின் மனிதவள மேம்பாட்டுத் தலைவர் திரு. P. அருள் ஜெனித் ராஜ், MBA., மற்றும் மனிதவள மேம்பாட்டு மூத்த நிர்வாகி திரு. K. வடிவேல்கார்த்திக், MBA.,அவர்களும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வினை கல்லூரியின் செயலாளர் திரு. M. ராஜாராம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் V. செல்லமுத்து அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.
சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..
Sunday, August 15, 2021
சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..
வத்ராப்,ஆக.15:சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களையும் தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரையும் கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுமக்கள் பயந்து கொண்டிருந்த வேலையில் நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா வைரசை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்..நேரம் காலம் பார்க்காமல் தூய்மைப் பணிகள் ,கிருமி நாசினி,பிளிச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறு கொரோனாவுக்கு மத்தியில் சிறப்பாக தூய்மைப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை சுதந்திரதின விழாவில் (ஆகஸ்ட் 15 ஆம்தேதி) விருதுநகர் மாவட்டம் ,வத்ராப் ஒன்றியம்,நெடுங்குளம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி தலைமையில் வத்ராப் வட்டாரகல்வி அலுவலர் செல்வலட்சுமி முன்னிலையில் துப்புரவு பணியாளர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், புத்தாடை வழங்கியும் அப்பள்ளி ஆசிரியர்கள் கௌரவித்தனர்.
முன்னதாக கொரோனா காலகட்டத்தில் கற்றல் நடைபெறாத சூழ்நிலையிலும் ஆசிரியர்களால் இணையவழியில் கொடுத்த பயிற்சியினை பயன்படுத்தி
தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெற்ற அகிலன் என்ற மாணவனுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் , கல்வி ஊக்கதொகை அப்பள்ளி ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.
மேலும் சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு வட்டாரக் கல்வி அலுவலர் செல்வலட்சுமி அவர்கள் பள்ளிவளாகத்திற்குள் மரக்கன்றுகளை நட்டினார்.பின்னர் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் விழாவிற்கு வந்திருந்த பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் மற்றும் பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு சுதந்திர தின நாளன்று தூய்மைப்பணியாளர்கள்,பள்ளி மாணவன் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த முப்பெரு விழாவை நடத்திய வட்டார கல்வி அலுவலர் செல்வலட்சுமி, நெடுங்குளம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி,மற்றும் அப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
மாணவ மாணவியரின் தேசப்பற்று மற்றும் கொரானா விழிப்புணர்வு ஒயிலாட்ட நடனங்கள்
75வது சுதந்திர தின விழாவில் நாட்றம்பள்ளி ஒன்றியம் K பள்ளத்தூர் கொரானா Lockdown - லிருந்து கந்திலி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி .சித்ரா அவர்களிடம் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் தேசப்பற்று மற்றும் கொரானா விழிப்புணர்வு ஒயிலாட்ட நடனங்கள்