திருத்தியமைக்கப்பட்ட தொழில் வரி விவரம்
11,12 வகுப்புகளில் இனி தோட்டக்கலை கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்
அடுத்த ஆண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தோட்டக்கலை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாடவ்டம் ரா.பட்டணம் அரசுப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ‘எந்தவிதமான பொதுத்தேர்வுகள் வந்தாலும் அதை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீட் தேர்வு பயிற்சிக்காக, ஆன்லைன் முறையில் 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் மருத்துவ படிப்புக்கு செல்வார்கள். அந்த வகையில் சிறப்பான பயிற்சிகள் அளிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது அரசு பள்ளி மாணவர்களுகு்கு புதிய வண்ண சீருடைகள் வழங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் ஒரு சீருடையும், 6 முதல் 8ம் வகுப்பு வரையில் மற்றொரு சீருடையும் வழங்கப்பட உள்ளது.
அறிவியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 202 காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இமையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை)
காலியிடங்கள்: 202
வயதுவரம்பு: 01.07.2018 அன்று 20 வயது நிறைந்தவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி சில பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: பல்கலைக்கழக மாணிய குழுவினல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2+3 என்ற அடிப்படையில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600
அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு; ஆசிரியரை அதிரவைத்த அமைச்சர் செங்கோட்டையன்
கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சரின் திடீர் ஆய்வு பள்ளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் மகன் திருமணம் திருக்கடையூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற அமைச்சர் செங்கோட்டையன் நேராகத் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குச் சென்றதோடு அங்குள்ள ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது : முதல்வர் பழனிசாமி பேச்சு
சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில்
அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்காக்களை முதல்வர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை!
ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது.
அதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு ஆசிரி யர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்உள் ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரி யர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு களை நடத்திவருகிறது.
பள்ளி காலை வழிபாட்டு - 31.08.18
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.08.18
திருக்குறள்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
விளக்கம்:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
பழமொழி
Pride goeth before a fall
தலைக்கனம் தரையில் வீழ்த்தும்
இரண்டொழுக்க பண்பாடு
1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.
2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களையும்,அசாதாரண முறையில் செய்யும்போது, உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
- ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
பொது அறிவு
1. உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
2.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது?
கோயமுத்தூர்
English words and. Meanings
Unique. தனித்தன்மை
Unity. ஒற்றுமை
Usual. இயல்பு
Universe. பிரபஞ்சம்
University பல்கலைக்கழகம்
திருக்குறள்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
விளக்கம்:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
பழமொழி
Pride goeth before a fall
தலைக்கனம் தரையில் வீழ்த்தும்
இரண்டொழுக்க பண்பாடு
1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.
2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களையும்,அசாதாரண முறையில் செய்யும்போது, உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
- ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
பொது அறிவு
1. உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
2.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது?
கோயமுத்தூர்
English words and. Meanings
Unique. தனித்தன்மை
Unity. ஒற்றுமை
Usual. இயல்பு
Universe. பிரபஞ்சம்
University பல்கலைக்கழகம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., 'நீட்' புத்தகம்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் படி, 'நீட்' தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்தவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்திலும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது'
தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. கற்றல் என்பது தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், வினவுதல், புதியன படைத்தல் என பல நிலைகளில் நடைபெறும்
வரலாற்றில் இன்று ( 31.08.2018 )
ஆகஸ்டு 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1422 – ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர்.
1886 – தென் கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
1897 – தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினெட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்.
1919 – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்ஷெவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
1942 – மேற்கு உக்ரைன், டெர்னோப்பில் என்ற இடத்தில் காலை 4:30 மணிக்கு 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாசி வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
1945 – ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்றது.
1962 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து திரினிடாட் டொபாகோ விடுதலை பெற்றது.
1968 – கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.
1978 – இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.
1986 – சோவியத் பயணிகள் கப்பல் “அட்மிரல் நகீமொவ்” கருங்கடலில் மூழ்கியதில் 423 பேர் கொல்லப்பட்டனர்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது.
1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
1997 – வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
1998 – வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.
1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – பக்தாத்தில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,199 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத் குமார் ஆரம்பித்தார்.
பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசுபள்ளி மாணவர்கள்
Thursday, August 30, 2018
புதுக்கோட்டை,ஆக.30: புதுக்கோட்டை ஒன்றியம் கம்மங்காடு ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது..
பேரணியை தொடங்கி வைத்து பள்ளித் தலைமையாசிரியர் கோ.சுமதி கூறியதாவது:
கம்மங்காடு ஒரு விவசாய பூமி எனவே இங்குள்ள மண்வளத்தை பாதுகாக்கவும்,விவசாயத்தை காக்கவும்,கால்நடைகளை பாதுகாக்கவும் இன்றைய தினம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி பள்ளிமாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது..மேலும் பள்ளிவளாகத்தை சுற்றியுள்ள அனைத்து கடைகளுக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தினர் என்றார்.
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-31-08-2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
பழமொழி :
Barking dogs seldom bite
குரைக்கின்ற நாய் கடிக்காது
பொன்மொழி:
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத
பெரிய சுமையாகிவிடும்.
-பெர்னார்ட்ஷா.
இரண்டொழுக்க பண்பாடு :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
பொது அறிவு :
1.ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?
புவி உச்சி மாநாடு
2.ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?
கர்நாடகா
திருக்குறள்:41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
பழமொழி :
Barking dogs seldom bite
குரைக்கின்ற நாய் கடிக்காது
பொன்மொழி:
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத
பெரிய சுமையாகிவிடும்.
-பெர்னார்ட்ஷா.
இரண்டொழுக்க பண்பாடு :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
பொது அறிவு :
1.ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?
புவி உச்சி மாநாடு
2.ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?
கர்நாடகா
Emis பணி மேற்கொண்டுள்ள சக ஆசிரியர்களது பணியை எளிமை படுத்தும் நோக்கில்.. சில தகவல்கள்..!
2018-2019 ஆம் கல்வியாண்டில்..
(இக்கல்வியாண்டு) பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
(இருப்பினும் ஒருமுறை open செய்து recheck செய்யவும்.)
2017-2018ல் பதிவு செய்யப்பட்ட மாணவர்களது (தற்போது இரண்டாம் வகுப்பு) தகவல்களும் முழுமையாக இருக்கும்.
தற்போது..
மூன்று, நான்கு மற்றும் ஐந்து.. மேலதீக வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கே கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் புது திட்டம்
வதந்திகள் பரவுவதைத் தடுக்க வானொலியைப் பயன்படுத்த வாட்ஸ் ஆப் திட்டம்
▪வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்படும்
வதந்திகளை முறியடித்து உண்மை நிலையை
விளக்க, ஆல் இந்தியா ரேடியோவின் 46 நிலையங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
▪மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்க போக்சோ சட்டம் குறித்து பயிற்சி
பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி தொடங்கியது.சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பது குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 32 மாதிரி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேனிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சமூக பாதுகாப்பு துறையின் இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் கூறியதாவது: கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து தடுப்பது தொடர்பான சட்டம் எனப்படும் போக்சோ 2012 சட்டம் குறித்து பயிற்சி அளிப்பது, அனைத்து கல்வி நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கண்ட பயிற்சி கொடுத்து போக்சோ சட்டத்தின் முக்கிய ஷரத்துக்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க இந்த மாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு!
அரசு கலை அறிவியல் கல்லூரி களில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந் தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந் தரம் செய்யப்படுவர் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கடந்த 30-ம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.
யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந் தரம் செய்யப்படுவர் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கடந்த 30-ம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.
பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் நகல்: இன்று பதிவிறக்கம் செய்யலாம்
தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து செப்.3-ஆம் தேதி முதல் செப்.4 வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறு மதிப்பீடு: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.505, இரு தாள் கொண்ட பாடம்- ரூ.1,010 (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)
மறுகூட்டல்: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.205, இரு தாள் கொண்ட பாடம் ரூ.305 (மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் உயிரியல்). இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து செப்.3-ஆம் தேதி முதல் செப்.4 வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறு மதிப்பீடு: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.505, இரு தாள் கொண்ட பாடம்- ரூ.1,010 (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)
மறுகூட்டல்: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.205, இரு தாள் கொண்ட பாடம் ரூ.305 (மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் உயிரியல்). இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு புதிய மையங்கள் பரிந்துரை பட்டியல் : தேர்வுத்துறை உத்தரவு
திருவண்ணாமலை: நடப்பு கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேர்வு மையங்களை அமைக்க தேவையான அறிக்கையை வரும் 17ம் தேதிக்குள் அனுப்புமாறு கல்வி அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். நடப்பு கல்வி ஆண்டில் (2018-19) பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுஇது தொடர்பாக, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர்டி.வசுந்தராதேவி அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மையங்களின் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. எனவே, மாணவர்களின் வசதிக்கு தகுந்தபடி தேர்வு மையங்கள் அமைப்பது அவசியம் என கருதப்படும் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்
இரண்டு சான்றிதழ் குளறுபடியால், சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் முடிவு எடுக்க முடியாமல், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், தையல், இசை, ஓவியம், உடற்பயிற்சி ஆகிய சிறப்பு பாடங்களுக்கு, 1,325 ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், 2017 செப்டம்பரில், போட்டி தேர்வை நடத்தியது. இதில், 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், ஜூன், 14ல் வெளியிடப்பட்டன.இதையடுத்து, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒரு இடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, ஆக., 13ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நடவடிக்கையில் திடீர் குளறுபடி ஏற்பட்டது.ஒரு தரப்பினர், தமிழக பள்ளி கல்வி துறையின் அரசு தேர்வு துறை சான்றிதழையும், இன்னொரு தரப்பினர், தமிழக வேலைவாய்ப்பு துறை தனியாக நடத்திய, தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழையும் காட்டினர்.
மிகச் சிறிய மொபைல் பிரிண்டர்
மொபைல் போன் அளவிலான பிரிண்டரை போலராய்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஸ்மார்ட்போனில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை இதில் உடனுக்குடன் போட்டோக்களாக பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும். இது 2.5 செ.மீ. தடிமன் கொண்டது. இதன் எடை 186 கிராம் மட்டுமே. இதில் வழக்கமாக பிரிண்டரில் பயன்படுத்தப்படும் வண்ண மைகளுக்கு பதிலாக விசேஷமான காகிதம் (ஜிங்க் பேப்பர்) பயன்படுத்தப்படுகிறது. இந்த காகிதத்தில் சியான், மஞ்சள், மெஜந்தா ஆகிய வண்ணங்கள் கிரிஸ்டல் வடிவில் இடம்பெற்றிருக்கும். நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் உள்ள வண்ணங்களுக்கு ஏற்ப அவை காகிதத்தில் பரவி புகைப்படம் கிடைக்கும்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்!
சென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக சென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மாதிரிப் பள்ளியாக மாற்றப்பட்டு, அங்கு மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30
ஆகஸ்ட் 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1]
1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.
1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.
1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.
1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.
1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.
1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.
1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.
1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.
1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.
1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
பிறப்புகள்
1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)
1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)
1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)
1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)
1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)
1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)
1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)
1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)
1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்
1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்
1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி
1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி
1963 – ஆனந்த் பாபு, இந்தியத் திரைப்பட நடிகர்
1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை
1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை
1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்
குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!
பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?
அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிட
முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார்
முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.18
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.18
ஆகஸ்ட் 30 :
சிறு தொழில் நிறுவன தினம்
திருக்குறள்
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
விளக்கம்:
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.
பழமொழி
A little stream will drive a light mill
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
இரண்டொழுக்க பண்பாடு
1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.
2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதுமே கதாநாயகன் தான்.
- காமராஜர்
பொது அறிவு
1. இந்தியாவின் எலக்ட்ரானிக் நகரம் என போற்றப்படுவது எது?
பெங்களூர்
2. இந்தியாவில் அமைதி பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது?
கேரளா
English words and. Meanings
Tacit. மௌனமான
Temperature வெப்பம்
Temporary தற்காலிகம்
Target. இலக்கு
Trial. ஒத்திகை
ஆகஸ்ட் 30 :
சிறு தொழில் நிறுவன தினம்
திருக்குறள்
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
விளக்கம்:
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.
பழமொழி
A little stream will drive a light mill
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
இரண்டொழுக்க பண்பாடு
1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.
2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதுமே கதாநாயகன் தான்.
- காமராஜர்
பொது அறிவு
1. இந்தியாவின் எலக்ட்ரானிக் நகரம் என போற்றப்படுவது எது?
பெங்களூர்
2. இந்தியாவில் அமைதி பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது?
கேரளா
English words and. Meanings
Tacit. மௌனமான
Temperature வெப்பம்
Temporary தற்காலிகம்
Target. இலக்கு
Trial. ஒத்திகை
பொம்மலாட்டத்தை காப்பாற்றுங்கள்” - அரசுக்கு கோரிக்கை
பொம்மலாட்ட கலையைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை டவுண் கல்லணை அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு சமூதாயத்தில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலை அறப்பேரவை சார்பில் அதன் இயக்குனர் கலைவாணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். பொழுதுபோக்கு பொம்மலாட்டமாக இல்லாமல் பெண் குழந்தைகளுக்கு சமூதாயத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும் கல்வி இடைநிற்றலால் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தும் விளக்கி காண்பித்தனர்.
TNPSC குரூப் - 4' வேலைக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
குரூப் - 4' பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது
இதற்கு நாளை முதல் சான்றிதழை பதிவேற்ற வேண்டும்
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு, பிப்.,11ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்
தேர்வு முடிவுகள் ஜூலை 30ல் வெளியாகின.
Flash News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த உயர்வானது ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இந்த உயர்வைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.#2%12018# ../—(@_)29, 2018
இந்த உயர்வின் மூலம் 48.1 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் பெறுவர்.
இந்த உயர்வின் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 6112 கோடி கூடுதல் செலவு ஏற்படும். நடப்பு நிதியாண்டில் ரூ. 4074 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர் மற்றும் உதவித் தலைமையாசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி
மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிறந்த தேதி தவறாக இருந்தால் பணி நீக்கம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என அதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர்.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதார மாக பயன்படுத்தி, பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.தமிழக அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி : 1295 கிளைகளின் IFSC கோடு எண்கள் மாற்றம்
நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது 1295 கிளைகளின் IFSC கோடு எண்களை மாற்றி உள்ளது.
வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வங்கியின் கிளைகளுக்கும் அடையாள எண்ணான ஐ எஃப் எஸ் சி கோட் எண் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக இணைய தள பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகள் கடந்த வருடம் இணைக்கப்பட்டன. அத்துடன் பாரத பெண்கள் வங்கியும் இணைக்கப்பட்டதால் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.
வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வங்கியின் கிளைகளுக்கும் அடையாள எண்ணான ஐ எஃப் எஸ் சி கோட் எண் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக இணைய தள பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகள் கடந்த வருடம் இணைக்கப்பட்டன. அத்துடன் பாரத பெண்கள் வங்கியும் இணைக்கப்பட்டதால் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.
வரலாற்றில் இன்று 29.08.2018
ஆகஸ்டு 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
708 – செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
1498 – வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
1521 – ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.
1541 – ஒட்டோமான் துருக்கியர் ஹங்கேரியின் தலைநகரைக் கைப்பற்றினர்.
1655 – வார்சா சுவீடனின் பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவின் சிறு படைகளிடம் சரணடைந்தது.
1658 – புரொட்டஸ்தாந்து சீரமைப்பு யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1756 – ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.
1782 – திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக் காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
1825 – பிரேசிலைத் தனிநாடாக போர்த்துக்கல் அறிவித்தது.
1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
1842 – நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாம் அபின் போர் முடிவுக்கு வந்தது. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் லண்டனில் ஆஸ்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.
1885 – கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.
1898 – குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1910 – ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.
1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.
1944 – 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
1949 – சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கசக்ஸ்தானில் நடத்தியது.
1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
1991 – சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.
1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
பிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம்
மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம்
மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்:
கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.
புதுக்கோட்டை,ஆக.29: தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வ மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒன்று திரட்டி *கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும்* என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 1 அன்று காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல் நிகழ்வானது நடைபெற உள்ளது.
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -29-08-2018
Tuesday, August 28, 2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
பழமொழி :
Ass loaded with gold still eats thistles
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
பொன்மொழி:
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண்
புரிந்து கொள்வது அவசியம்.
-அன்னை தெரசா.
இரண்டொழுக்க பண்பாடு :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
பொது அறிவு :
1.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?
மும்பை
2.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்றாமிடம்
திருக்குறள்:39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
பழமொழி :
Ass loaded with gold still eats thistles
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
பொன்மொழி:
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண்
புரிந்து கொள்வது அவசியம்.
-அன்னை தெரசா.
இரண்டொழுக்க பண்பாடு :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
பொது அறிவு :
1.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?
மும்பை
2.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்றாமிடம்
கட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது!" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்
மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின்
பிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதையொட்டி, மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கெளரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராடி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். வாழ்த்துடன் உரையாடினோம்.
``என் பூர்வீகம், கோத்தனூர். அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்தார். நானும் என் அக்காவும் கல்வித்துறையிலேயே பயணிக்க ஆசைப்பட்டார். 1995-ம் ஆண்டு, டிஆர்பி (ஆசிரியர் தகுதித்தேர்வு) எழுதி, ஆசிரியராகத் தேர்வானேன். சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தின் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். பல பள்ளிகளுக்கு இடமாறுதலாகி, 2009-ம் ஆண்டில், தலைமை ஆசிரியை ஆனேன். இந்தப் பள்ளிக்கு வந்தது 2012-ம் ஆண்டு.
நான் வொர்க் பண்ணின எல்லாப் பள்ளிகளிலுமே, மாணவர்கள் நல்ல சுற்றுப்புறச் சூழலில் படிக்கணும். அவர்களின் கல்வித்தரம் உயரணும் என்பதில் கவனமா இருப்பேன். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பலரின் உதவிகளுடன் மேம்படுத்தியிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கு வந்தபோது, வகுப்பறையும் கட்டடங்களும் பழுதாகி இருந்தன. கழிவறை வசதி சரியில்லை. இவற்றைச் சரிசெய்ய களம் இறங்கினேன். மாணவர்களுக்குக் கழிவறை வசதியை ஏற்படுத்த, எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் நிதி போதுமானதா இல்லை. எங்க கிராமத்தில் உள்ள எல்.என்.டி கம்பெனி நிர்வாகத்திடம் உதவி கேட்டேன்.
அவங்க கொடுத்த 5 லட்சம் நிதியுதவியால், தரமான கழிவறை வசதியை உருவாக்கினோம். அந்த முதல் வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அப்போது, 146 மாணவர்கள் இருந்தாங்க. மாணவர்கள் இடைநிற்றலும் அதிகமா இருந்துச்சு. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் எங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சவாலாக இருந்துச்சு. இதை எல்லாம் மாற்றி, தனியார் பள்ளிக்கு இணையா கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம்'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் ஸதி.
Subscribe to:
Posts (Atom)