ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம் ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்
Saturday, June 27, 2020
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்கப்படும். இந்த ஊக்க ஊதியம் ஆசிரியர்களின் பணிக்காலத்தில் 2 முறை வழங்கப்படும். அதேபோல் அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் ஆசிரியர்கள் குறித்து குறிப்பிடாதது, ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் உயர்வு ரத்து செய்யப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாணையை காட்டி, மாவட்ட கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகின்றனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
இது குறித்து தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் ஜோசப் சேவியர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன் கூறியதாவது
பல ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது
சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு மட்டுமே நிறுத்தப்பட்டது.
ஆனால் கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு தர மறுக்கின்றனர். ஏற்கனவே அகவிலைப்படியை நிறுத்திய நிலையில் ஊக்க ஊதிய உயர்வை நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது
இதுகுறித்து முதல்வர், கல்வித்துறை அமைச்சர் துறை இயக்குநர்கள், கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு தெளிவான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வீட்டு வாடகைப்படியினை வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத இடங்களிலுள்ள பள்ளிகளுக்கும் வகை 3 ன் வட்டத்திற்குட்பட்ட தலைமையிடமாகக் கொண்டு வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக கணக்கிட்டு பட்டியல் சமர்ப்பித்து காசாக்கியுள்ளனர் எனவும் , மேலும் கருவூல அலுவலகத்தால் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டதில் குறிப்பாக கடத்தூர் , பாப்பாரப்பட்டி , மாரண்டஅள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத தேதிகளில் வழங்கப்பட வேண்டிய வீட்டு வாடகைப்படிக்கு பதிலாக வகை 3 ல் உள்ள வட்ட தலைமையிடத்திற்குண்டான வீட்டு வாடகைப் படியினை அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக பெற்று வழங்கியுள்ள கீழ்கண்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியில் உள்ள பணியாளர்களுக்கு ( ஆசிரியர்கள் உட்பட ) 01.10.2017 முதல் மிகையாக பெற்று வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை தவறுதலாக வீட்டு வாடகைப்படி எதன் அடிப்படையில் பெற்று வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கம் மற்றம் செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக வேறு பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று வழங்கியிருப்பின் அவர்களும் மேற்கண்ட அறிவுரைகளின் படி மிகையாக வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கும் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கும் சார்ந்த சார்நிலை கருவூல அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு மாவட்டக் கருவூல அலுவலர் அரசுக்கு கடிதம் அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம் !!!
Subscribe to:
Posts (Atom)